திங்கள், 21 பிப்ரவரி, 2011

தரிசன நாள்

இன்று அன்னையின் பிறந்த தினம்.
சமர்ப்பணம் பலிப்பது சர்வமும் வெற்றியாவது.
செயலுக்குக் காலம் தேவை.
நல்லவரை அன்னை நாடி வருகிறார்.
உண்மையான சக்தி மௌனத்திலுறைகிறது.
நேரம் பெரிய நேரமானால் ,எவரும் எதையும் செய்யத்
தயங்க மாட்டார்கள்.

செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

தலைமைப் பண்பு


தன்னலம் தவிர்த்தார் ;தலைவர் ஆனார்.

தியாகமும்,சேவையும் தலைவரின் இன்றியமையா இரு குணங்கள்.

இயலாதோரையும் ஏற்றமுறச் செய்வார் இனிய தலைவர்.

வழியாக அமைபவனும்,வழியை அமைப்பவனும் மாபெரும் தலைவன்.

அறிவையும்,உணர்வையும் சமநிலைப்படுத்துபவன் உயரிய தலைவன்.

பாதையை அறிவது மட்டுமன்று ;பாதையாக ஆவதும் உயரிய தலைமை.

ஒன்றாக இருப்பதும்,ஒருங்கிணைப்பதும் உத்தமத் தலைவன் இலக்கணம்.

மாண்பாக நடப்பவர் மதிப்பான தலைவர்.


தருவதில் மகிழ்பவர் தன்னிகரில்லாத் தலைவர்.

இயங்கிக் கொண்டே இருப்பதைவிட,இயக்கிக் கொண்டே
இருப்பது இனிய தலைமை.

உரிமையை உணர்ந்து,உண்மையை உரைப்பவர் உயரிய
தலைவர்.

திசையைத் தெளிவாக்கி,விசையை நெறிப்படுத்துபவர்
விண்ணுலகையும் ஆளும் தலைவர்.
(நன்றி;தூதன்)
தலைமையேற்கும் தன்னிகரில்லாப் பண்பு கொண்டவர்கள் ,தரணியை வெல்லும் தனித்தன்மை கொண்டவர்கள்.இவர்கள் புரிவது கர்ம யோகம்;
இவர்கள் செய்ய வேண்டியதில்லை யாகம்.

திங்கள், 14 பிப்ரவரி, 2011

வாழ்க்கை

வாழ்க்கையில் வேதனைகளைத் தவிர்க்க முடியாது.துன்பங்களும்,துயரங்களும்
வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே இருக்கின்றன.எத்தனையோ கஷ்டங்களை நாம் அனுபவிக்கின்றோம்.எத்தனையோ துயரங்களைச் சந்திக்கிறோம்.
இவ்வளவு கஷ்டங்கள் நமக்கு ஏன் ஏற்பட வேண்டும் எனச் சிந்திக்கிறோம்.
வேதனைகள் அனுபவங்களாக மாற வேண்டும். வேதனையை அனுபவித்தால் மட்டும் பயனில்லை.வேதனை ஏன் ஏற்பட்டது,அதை எந்த வழிகளில் தவிர்த்திருக்கலாம் என்றெல்லாம் யோசிக்கும்போதுதான் அது அனுபவமாகிறது.துன்பங்களிலிருந்து பாடம் கற்றுக் கொள்வதுதான் அனுபவம்.
அந்தப் பாடம் என்பது உண்மையை உணர்தல்.
இது தான் தீர்வு!எல்லாப் பிரச்சனைகளையும் இதி தீர்க்கும்.கேட்பதற்கு ஏதோ தத்துவம் போலத் தோன்றினாலும் இதுதான் உண்மை.

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

பாரதி

ஆன்ம ஒளியில் மூழ்கித் திளைத்து ஆனந்தம் கண்ட கவி.
                                         மண் பயனுற வேண்டும்
                                         வானகம் இங்குத் தென்பட வேண்டும்
                                         உண்மை நின்றிட வேண்டும்
                                        
                                         ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
                                          
                                         இத்தரை மீதினில் இன்பங்கள் யாவும்
                                          எமக்குத் தெரிந்திடல் வேண்டும்.

பாட்டுத் திறத்தாலே வையத்தைப் பாலித்திட எண்ணியதற்குக் காரணம் அவனுள்ளே முகிழ்த்த ஆன்மவொளி!

கடவுள்

கடவுள் எல்லா இடங்களில் இருந்தாலும் அவரை நல்ல மனிதப்பண்புகளின் மூலமே நாம் அறிய முடியும்.

                                 ஜெர்மன் நாட்டு சமுதாயப் பேராசிரியர் மேக்ஸ் வெபர் கூறுகிறார்,''உலகம் திருத்தமுடியாத அளவுக்குக் கேவலம் அடைந்த போதிலும்,அடிமுட்டாள்களாக மக்கள் நடந்து கொண்ட போதிலும் அதைக் கண்டு  ஆயாசப்படாமல் ,எப்படியிருந்தாலும் சரி என்று எவன் நம்பிக்கையுடன் செயல்படுகிறானோ அவன் அந்தராத்மாவில் அழைப்பு இருந்து கொண்டே இருக்கிறது''.பெருந்தலைவர்கள் பலரும் அத்தகைய அந்தராத்மாவின் குரலைக் கேட்டவர்கள் தான்.

சனி, 5 பிப்ரவரி, 2011

ஆன்ம ஆனந்தம்

ஆன்மிக அமைதி மேம்பட்டது.முடிவற்றது.அது வெறும் சிந்தனைத் தெளிவோ,
மனக் கட்டுப்பாடோ,சாத்வீக நிலையோ அல்ல.அதுவே 'பேரமைதி' என்பது.இதனால் ஏற்படும் விளைவுகள் முழுமையாக,நிரந்தரமாக இருக்கும்.தனது ஒவ்வோர் அணுவிலும் அது பரவியிருப்பதை உணரும்போது அதனுடைய விளைவுகள் மகத்தானவையாக இருக்கும்.
                                                                        -ஸ்ரீஅரவிந்தர்