புதன், 19 ஜனவரி, 2011

அன்னையே சரணம்                                                               அன்னையே  சரணம்!ஓம் நமோ பகவதே!ஆனந்த மயி,சைதன்ய மயி!              சத்ய மயி பரமே!


    ‘ பக்தியும்,சேவையும்’  என்ற புத்தகத்தில்  ‘அன்னை விரும்பும் ஆன்மீகப் பக்குவம்தொடங்கிஅன்னை அரவிந்தர் அவர்களுக்குக் கிடைத்த சில ஆன்மீக அனுபவங்கள்வரை 29 தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
                       அதில் சில தலைப்புகள்,

     1.மனித உறவுகளைப் பற்றி.
     2.ஆன்மீக வாழ்க்கையும்,மனித உணர்வுகளும்.
     3.நன்மை,தீமைகளைப் பற்றி ஒரு கண்ணோட்டம்
     4.அன்பர்களின் அன்றாட வாழ்க்கையில் அன்னை.

     முதலாவதாகமனித உறவுகளைப்பற்றி எடுத்துக் கொள்வோம்.
     எல்லா மனிதர்களும் மற்ற மனிதர்களுடன்  உறவாடுவதால்,
     மனிதர்களுக்கிடையே உள்ள உறவுகள் என்பது எல்லோருக்கும் 
     பிடித்தமானதொன்றாகிறது.உளவியல் நிபுணர்கள்,தத்துவ ஞானிகள்
     ,கவிஞர்கள்,எழுத்தாளர்கள் மற்றும் பலவகைச்
     சிந்தனையாளர்கள் எல்லாம் மனிதர்கள் உறவாடுவதைப்
     பற்றி பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்கள்.சராசரி
     மனிதன் கூட தான் மற்றவர்களுடன்
     உறவாடுவதிலிருந்து புதுப்புது உண்மைகள் தெரிந்து கொள்கிறான்.                                           
     மனித உறவுகளை உன்னதமாகவும்,உயர்வாகவும் மாற்ற மக்கள்
     பெருமுயற்சி செய்துள்ளார்கள்.அன்பாகவும், ஒருவருக்கொருவர்
     விட்டுக்கொடுத்தும் பழக வேண்டும் என்று பலர் ஆசைப்படுவதுண்டு
     .பெற்றோர்கள் தம்முடைய பிள்ளைகளைத் தம்முடைய
     பிரதிபிம்பமாக உருவாக்க முயல்வதுண்டு.தொண்டர்கள் தலைவர்களைத்
     தெய்வமாகப் போற்றுவதுண்டு.இருந்தாலும் இத்தகைய இலட்சிய 
     உறவுகள் ஒரு சில நேரங்களில்தாம் உண்மையாகின்றன.பெரும்பாலான 
     மக்கள் தம்முடைய அன்றாட வாழ்க்கையில் தேவையின் 
     பேரிலும்,சுயநலத்தின் பேரிலும் தான் மற்றவருடன் பழகுகிறார்கள்.
     மனிதர்களின் உறவாடலில் தேவையென்பது ஒரு பெரும்பங்கை
     வகிக்கிறது.தேவையில்லாத பொழுது மற்றவர்களுடன் ஓருறவை
     வளர்த்துக் கொள்வது மிகவும் கடினமாகக் கூட 
     அமையலாம்.மற்றவர்களுடன் நன்றாகப் பழகக்கூடிய ஒருவருக்கு
     அமைந்த கத்துவீட்டுக்காரர் தனிமையை நாடுபவராக இருந்தால்,
     அவரோடு உறவாடுவது மிகக் கடினமாகும்.தேவை 
     என்பது அளவோடு இருந்தால்தான் மனித உறவுகள் இன்பகரமாக 
     இருக்கும்.ஆனால் இத்தேவையை அளவோடு வைத்திருப்பது மிகவும்
     கடினம்.அது அளவை மீறும்பொழுது பல பிரச்சனைகள் உண்டாகின்றன.
     தேவையைப் போல பிரச்சனை உண்டாக்கக்கூடிய இன்னொரு
     விஷயம் அதிகாரம் செய்வது.மனிதர்கள் மற்றவர்களை அடக்கி
     ஆள்வதில் ஓர் இன்பம் காண்கிறார்கள்.பெற்றோருக்கும்,பிள்ளைகளுக்கும்
     இடையே  இப்பிரச்சனை பெரும்பாலும் வாராது.கணவன்,மனைவியிடையே 
     உருவாவதற்கு நிறைய சந்தர்ப்பங்களுண்டு.நட்பு வட்டத்திலும்
     இவ்வாறான பிரச்சனைகள் எழும்.சிலர் தோழர்களை அதிகாரம் செய்ய 
     முயல்வார்கள்.அத்தகைய ஒருவரின் அதிகாரத்தைத் தோழர் ஏற்றுக்
     கொண்டால்,உறவு சுமுகமாகத் தொடரும்.இல்லையெனில் சிக்கல் 
     எழும்.சுயநலம்,அன்பைப் பெறுதல் அல்லது காட்ட வேண்டும் என்ற
     தேவை,அதிகாரம் செய்ய விரும்புதல் ஆகிய மூன்று அம்சங்களால்
     மனிதர்களுடைய உறவாடலில் உள்ள மகிழ்ச்சி,சுமுகம் ஆகியவை 
     கெட நேரிடுகிறது. பெற்றோர்கள் தம் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும்
     பிள்ளைகள் மேல் அதிக பாசம் காட்டுகிறார்கள்.பெற்றோர்,பிள்ளை உறவே 
     இவ்வாறிருக்க பிற உறவுகளைப் பற்றிச் சொல்ல வேண்டிய 
     அவசியமில்லை.இம்மாதிரு குறைகள் நிறையப் பேரிடம் இருப்பதால்
    , இவையில்லாதவர்களை மக்கள் விநோதமாகப் பார்க்கிறார்கள்.யாரேனும்
     ஒருவர் நல்ல எண்ணத்தில் உதவ முன் வந்தாலும்,அதை நம்பாமல்
     வேறு ஏதேனும் காரணம் இருக்கும் என்று நினைக்கிறார்கள்.
     மேலும் மனித சுபாவத்தில் எந்நேரமும் வாழ்க்கையில் ஒரு ருசியைத் 
     தேடும் குணம் உள்ளது.நல்லவிதமாகக் கிடைக்கும் இன்பத்தை விடத்
     தவறாகக் கிடைக்கும் ருசியை மனிதமனம் அதிகமாக நாடுகிறது.

ஞாயிறு, 16 ஜனவரி, 2011

அன்னையே சரணம்


                                          அஸ்திவாரம் வாழ்வுக்கு
                                          ஆன்மீகமே!