செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

ஆனந்தம் -அனந்தம்

                          
                                            எங்கெங்கு  காணினும்  சக்தியடா-தம்பி
                                            ஏழுகடலவள்   வண்ணமடா -அங்குத்
                                            தங்கும்   வெளியினிற்  கோடியண்டம்-அந்தத்
                                            தாயின்  கைப் பந்தென  ஓடுமடா

             இறையாற்றல்  இந்த  பூமிப் பந்தை  சுழலச்  செய்கிறது.அதில்  நாம்  ஆனந்தத்தைத்  தேடி  அலைந்து  கொண்டிருக்கிறோம்.கால ஓட்டமானது  ஆனந்தத்தை நமக்கு  அனந்தமாகத் தருகிறது.ஆனந்தம்  அனந்தமாக  இருப்பதை  கண்ணதாசன்  அர்த்தமுள்ள இந்து  மதத்தில் சொல்கிறார்.
                                   சிங்காசனத்தில்  வீற்றிருந்து  செங்கோல்  செலுத்திய  மாமன்னர்களின்  பெயர்கள் கூட  வரலாற்றில்  மறைந்துவிடும்.
  ஆனால்,
                     வாழ்க்கையின்   இன்ப ,துன்பங்களை   நன்றாக   அனுபவித்து 'முழு  உண்மைகளைத்' தெரிந்து  அவற்றை   மக்களிடையே  பொழிந்த  ஞானிகளின்  பெயர்கள்  வரலாற்றில்  என்றும்  மறையாது ,அழியாது.
தத்துவ ஞானிகள்  தான்  இந்த  நாட்டின்  தலைவிதியை  நிர்ணயிக்கின்றனர்.
வெற்றி  பெற்றவனுக்கு  எதுவும் சர்வசாதாரணமாகத்  தெரிகிறது.தோல்வியுற்றவனுக்கோ  எதைக்  கண்டாலும்  பயம்  வருகிறது.
வென்றவனுக்கு  மலையும்  கடுகு ;தோற்றவனுக்கு  கடுகும்  மலை.
                                                        வெற்றி   மயங்க  வைத்துத்  தோல்வியை  இழுத்துக்  கொண்டு  வருகிறது.தோல்வி  அடக்கத்தத்தைத்  தந்து  வெற்றியைக்  கொண்டு  வருகிறது.
                                              வருவது  போவதற்காக ; போவது  வருவதற்காக ;  பிறப்பது   இறப்பதற்காக  ;இறப்பது  பிறப்பதற்காக ;அழிவது  மீள்வதற்காக ; மீள்வது  அழிவதற்காக ;விதைப்பது  அறுப்பதற்காக ;அறுப்பது   விதைப்பதற்காக.
                                             கோடையில்  குளம்  வற்றிவிட்டதே  என்று  கொக்கு  கவலைப் படக் கூடாது,மீண்டும்  மழைக்காலம்  வருகிறது.
                                                மழைக்காலம்   வந்து விட்டதேன்று  ந்தி  குதிக்கக் கூடாது;அதோ  வெயில்காலம்  வந்து  கொண்டிருக்கிறது.
                                                இன்ப ,துன்பத்தை  சமமாகப்  பாவிக்க  வேண்டும்   என்ற  மனோநிலையை  இது  காட்டுகிறது.இம் மனோநிலையே  ஆனந்தத்திற்கு  வழி தானே?
ஆனந்தத்தின்   உற்பத்தி ஸ்தானம்  அனந்தம்.
                                       தனக்கு  உவமை   இல்லாதான்   தாள்   சேர்தலே
அனந்தமான   ஆனந்தத்திற்கு  வழி. 
          

சனி, 25 ஜூன், 2011

ஆன்ம அழைப்பு

                             ஆன்மாவை   அழைப்பது   எப்படி?
                                   
                               பலர்    ஆன்மாவை   அழைப்பதில்   வெற்றியடைகிறார்கள்.அதை   எப்படி  நிதானமாக  வளர்த்துக்  கொள்வது   என்பது  கேள்வியாக  உள்ளது.ஆன்மா  மனதிற்கு  அடுத்த  உயர்ந்த  நிலையில்  உள்ளது.ஒருவர்  ஆன்மாவை  அழைக்கும் போது  அவருடைய  எண்ணங்கள்  குறுக்கிடுகின்றன.அவருடைய  முயற்சியைப் பயனற்றுப்  போகச்  செய்து  விடுகின்றன.மனிதன்  அவன்  எண்ணங்களுடன்   பிரிக்க முடியாத படி  இணைக்கப் பட்டுள்ளான்.இந்த  உண்மையை  உணர்ந்து  மேலும்   நினைக்கக் கூடாது  என்று  முயல்வது,மனிதனை  எண்ணங்களிலிருந்து  பிரிக்கிறது.பிறகு  ஆன்மாவை அழைத்தல்  சாத்தியமாகிறது  என்பது  சத்தியம்.


ஞாயிறு, 19 ஜூன், 2011

"If  winter  comes,can  spring  be  far  behind"என்று  ஒரு  கவிதையில்  கேள்வி  விடுத்து,தனக்குத் தானே  நம்பிக்கை ஊட்டிக் கொள்கிறார் ஷெல்லி.இறைவனைச் சரணடைந்தோர் அடையும் இன்பமும் இவ்வாறே நம்பிக்கையின் பாற்பட்டது.இதிலே  துன்பம் எது,இன்பம்  எது  என்று  நம்  மனதிற்குள்ளாகவே  கேட்டு  நாமே  ஆய்ந்து  துயருக்கான  காரணத்தைக்  காண  முடிவது  சிறப்பு.பரிகாரங்களோ,திரு நாமங்களோ  மனதைப்  பக்குவப் படுத்தாது.
நாம்  கேட்கும்  கேள்வியையும்.நம்  மனம்  தரும்  பதிலையும்  பொறுத்துத்  தீர்வு  கிடைக்கும்.


திங்கள், 13 ஜூன், 2011

பொய்மை

ஆன்மிகத்தை மனம்  ஏற்றுக்  கொண்டால்  ஒருவர்  பொய்யே  சொல்ல  முடியாது.அரசு அலுவலகங்கள் ,கடை  வீதி, வீடு  மற்றும்  எல்லா  இடங்களிஙும்  பொய்மையில்  மூழ்கடிக்கப்பட்ட   வாழ்க்கை  நமக்குத்  தலை  வணங்கும். நம்மை  அதன்  விருப்பத்திற்கு  இணங்கும்படி  கேட்காது.அதற்குப்  பதிலாக  மக்கள்  நம்மிடம்  நேர்மையுடன்  நடந்து   கொள்ள  விருப்பம்  தெரிவிப்பார்கள்.
அப்படிப் பட்டவரின்  வேலை   கணத்தில்   முற்றுப்  பெறும்.

ஆன்ம விளக்கம்


                    
குடும்பத்தில்  தொன்மையான  தூய்மையுடனும், யோகப் பரவசத்துடனும்  வாழ்ந்தால்  அது   மனித வாழ்வை  தெய்வீக  வாழ்வாக  உயர்த்தும்.
                                          நீண்ட  பயணத்தின்  இலட்சியம்  அதுவானால்  வாழ்வில்  தாழ்ந்த  நிலையில்  உள்ளவர்  முதலாவதாக  அடியெடுத்து  வைப்பது  என்பது  ஆன்மாவில்  வாழ்வதாகும்.அப்படிப்பட்ட  வாழ்விற்கு  என்ன  செய்ய  வேண்டும்?
இது வரை     பின்பற்றிய    எல்லா  மத  வழிபாடுகளும்  விலக்கப்பட  வேண்டும்.மத வழிபாடுகள்  செய்த  காலம்  முடிந்து  விட்டது.எதிர் காலம்  ஆன்மீகத்திற்கு  உரியது.

செவ்வாய், 7 ஜூன், 2011

ஆன்மீகம் என்பது என்ன?

                               ஆன்மிகம் தபஸ்விக்கும்,வாழ்வு குடும்பத்தில் உள்ளவர்க்கும் உரியது என்பது மரபு.நம்முடைய மரபு மதரீதியானது.நம்மில் ஒவ்வொருவரும் ஆன்மாவை உணர்வதற்காக தபஸ்வியாகவோ,துறவியாகவோ முடியுமா?
விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளை ஒவ்வொருவரும் அனுபவிக்கும் வகையில் நவீன தொழில்நுட்பம் வழி செய்துள்ளது.அம் மாதிரியே ஆன்மிகத்தின் பலன்களை அனைவரும் பெறும்படி செய்து கொள்ளலாம்.

                                                    சாதாரணமாக எந்த இடத்திலும் பொய்யும்,மெய்யும் கலந்து தான் இருக்கும்.அதில் மெய்யைத் தேர்ந்தெடுத்தல் ஆன்மிகம்.ஒரு வேலையை எப்படி வேண்டுமானாலும் செய்யலாம்.நேர்த்தியோடு செய்யும் வேலையில் தெய்வாம்சம் உள்ளது.

செவ்வாய், 17 மே, 2011

பக்தியும்,சேவையும்

மனித உறவுகளைப் பற்றிமனிதர்கள் உறவாடலில் தேவையென்பது ஒரு பெரும்பங்கை வகிக்கிறது.  தேவை என்பது அளவோடு இருந்தால் தான் மனித உறவுகள் இன்பமாக இருக்கும்.இத் தேவையை அளவோடு வைத்திருப்பது கடினம்.அது,அளவை  மீறும் பொழுது பிரச்சனைகள் உண்டாகின்றன.

     தேவையைப் போல பிரச்சனை உண்டாக்கக் கூடிய இன்னொரு விஷயம் அதிகாரம் செய்வது.மனிதர்கள் மற்றவர்களை அடக்கி ஆள்வதில் ஓர் இன்பம் காண்கிறார்கள்.கணவன்,மனைவியிடையே பிரச்சனை உண்டாவதற்குக் காரணம் இதுதான்.பெரியவர்களான பிறகு பிள்ளைகள் பெற்றோரின் அதிகாரத்தை ஏற்றுக் கொள்ளாமல் போனால் பிரச்சனை வருவதுண்டு.நட்பு வட்டத்திலும் கூட இவ்வாறான பிரச்சனை எழுவதுண்டு.

செவ்வாய், 26 ஏப்ரல், 2011

அதிர்ஷ்டம்


                          
              பயந்து அடங்குபவன் பிழைக்கத் தெரிந்தவன்.

             மகிழ்ச்சியால் மலர்பவன் அதிர்ஷ்டம் பெறுவான்.

ஓசையின் தொடர்ச்சி
 • உரிமையைப் பிறருக்கு அளித்துக் காத்திருப்பது இறைவனின் பொறுமை.
 • தேடிப் போவது,நாடி வருவது காலம்,இடத்தைக் கடந்த பண்பு.
 • எதைப் பெற்றால் அனைத்தையும் பெற முடியுமோ அதுவே நிம்மதி.
 • மாற வேண்டிய இடத்தில்,மாற்றம் அதிர்ஷ்டத்தை வெளிப்படுத்தும்.
 • அருள் கொடுத்ததை எடுப்பதில்லை.

ஜீவியத்தின் ஓசை


தானே செயல்படுவது ஆன்மா.நாமே செயல்பட முனைவது அகங்காரம்.


நாம் நினைப்பது தானே நடந்தால் நாம் சரியாக இருப்பதாக அர்த்தம்.


பிரம்மம் மனித வாழ்வில் எட்டிப் பார்ப்பதை,தெய்வச் செயல் என்கிறோம்.


உள்ளே சுயநலமும்,வெளியே நல்ல பழக்கமும் ஆன்மிகப் பலனைத் தராது.


எச்சரிக்கையை மதிப்பவருக்கு வாழ்வில் தவறு நடப்பதில்லை.

தியானம்ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

ஆன்ம ஒளி


                               வேதங்களை ஓதுகிறார்கள்,சாத்திரங்களை
                               யெல்லாம் கரைத்துக் குடிக்கிறார்கள்
                                இருந்தாலும் அவர்கள் இறைவனை
                               அறிய முடிவதில்லை
                               நாத்திகர்களோ இறைவன் இல்லை,
                                                                                  இருக்கிறான்
                               என்றால் காட்டு என்கிறார்கள்

                              இறைவன் உண்டு என்று நம்புகின்ற
                              ஆத்திகர்களாலேயே அறியமுடியாதபோது
                              இல்லை என்று முடிவு செய்து விட்ட
                               நாத்திகர்களால் எப்படி இறைவனை
                              அறிய முடியும்?
                              இந்த இருவரும் ஒரே தவற்றைச்
                              செய்கிறார்கள்
                              இறைவனை 'அறிய' முயல்கிறார்கள்
                              உண்மை என்னவென்றால் இறைவனை
                              உணரத்தான் முடியும்,அறிய முடியாது
                              அறிவுக்கு எட்டாதது எதுவோ அதுவே
                             இறைமை.
                                                                     -அப்துல் ரகுமான்
இதையே அன்னையின் சைத்தியக் கல்வி சொல்கிறது.

''அறிவை நம்பாதே, ஆன்மாவை நம்பு''.  ஆன்ம அனுபவம் இறைத் தேடலுக்கு வழி.

புதன், 20 ஏப்ரல், 2011

கவியின்பம்


 • உலகினிலே எல்லோரும் பேசுகின்றார்
 • ஒருவரே பத்தில் அதை எழுதுவர்! அப்
 • பலபேரில் கவி எழுதும் திறமை பெற்றோர்
 • பத்தாயிரத்திலொரு பேரே ;அஃதுள்
 • சில பேரே உலகநலப் பொது நோக்கோடு
 • ஜீவனுள்ள கவிதைகள் செய்வார் ;என்றாலும்
 • நில உலகில் இன்றுள்ள அத்தகைய பாக்கள்
 • நீலவான் மீன்கள் ஒக்கும் வயதில்,எண்ணில்!
                                                                        -வேதாத்ரி மகரிஷி

வியாழன், 7 ஏப்ரல், 2011

பெரு வழி


ALL  CAN  BE  DONE  IF  GOD  TOUCH  IS  THERE.


 • நாம் விலங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்றது பெருமைக்குரிய விஷயந்தான்.ஆனால் இன்னும் நம்மால் வெற்றி கொள்ளப்படாத பல விஷயங்கள் இருப்பதைப் பார்க்கும் போது இந்தப் பெருமை சற்றும் பொருளற்றதாகிறது.
 • மகிழ்ச்சியின் தொட்டறியாத எல்லைகள் தானாகவே திகழும் அறிவின் பரப்புகள்,இந்த ஆன்மாவின் அமைதி நிலை,இப்படி வெற்றி கொள்ளப் பட வேண்டியவை அநேகம்.
 • இவற்றில் இறைத் தொடுதலின் கண நேர அனுபவமே மகத்தானது.நாம் இதுவரை பெற்ற யாவும் இதற்கு ஒப்பாக மாட்டா.
 • அந்தப் பேரின்பத்தை அடையும் மார்க்கமோ குறுகியதாயிருக்கிறது.
 •                                                                    -ஸ்ரீஅரவிந்தர்

புதன், 6 ஏப்ரல், 2011

முத்துச் சிதறல்

கணக்கறிந்தார் கல்வி கற்றறிந்தாரே-திருமந்திரம்
நன்றாற்றலுள்ளும் தவறுண்டு -திருக்குறள்
ஒன்று பரம்பொருள் நாமதன் மக்கள்-பாரதி


பண் இனிது ,பாடல் உணர்வார் அகத்து-நான்மணிக்கடிகை

வெள்ளி, 25 மார்ச், 2011

நம்பிக்கை


மனதில் உருவாகும் எண்ணங்களின் மீது நம்பிக்கை வைத்தால்,
அது சாதனையில் முடியும்.
அமைதியான மனம் அடைய வல்லமை வேண்டும்..
நாம் சந்திக்கும் அனைத்து மனிதர்களிடத்தும் ஆரோக்கியம்,மகிழ்ச்சி,வளமை
குறித்துப் பேச வேண்டும்.
நாம் பார்க்கும் அனைத்திலும் நல்லவற்றையே காண வேண்டும்.
சிறந்ததை எண்ண வேண்டும்,சிறந்ததையே செய்ய வேண்டும்.
சிறந்ததை எதிர் நோக்க வேண்டும்.
மற்றவர்களின் வெற்றியை நமது வெற்றியாக நினைத்து மகிழும் மனம்
வேண்டும்.
கடந்த காலத் தவறுகளை மறந்து எதிர்கால வெற்றிக்காக முயல வேண்டும்.
மற்றவர்களிடம் குறை காணுவதில் நேரத்தைச் செலவிடாமல் நம்மை
உயர்த்துவதற்காக நேரம் செலவிட வேண்டும்.
இதை வார்த்தையில் இல்லாமல்,செயலாக்க முற்பட்டால் உலகம் நம்
பக்கம் என்ற நம்பிக்கை மெய்ப்படும்.

திங்கள், 21 மார்ச், 2011

முத்துக்கள் மூன்று

வாழ்க்கை விலை மிகுந்த ஒரு வாய்ப்பு.ஆனால் அதன் மதிப்போ வாழ்வோரைப் 

பொறுத்தது.                                                     -ஓஷோ


ஒழுக்கத்தோடு இருந்தால்,கவலையற்று,அச்சமற்று இருக்கலாம்.
  


வாய்ப்புகளின் ஆரம்பம் முயற்சியின் ஆரம்பத்தில் இருக்கிறது.                                                                                                   

ஞாயிறு, 6 மார்ச், 2011

மதங்கள்

ஸ்ரீ ராமகிருஷ்ணர் 1866ல் கோவிந்தர் என்பவரிடம் இஸ்லாமிய தீட்சை பெற்றார்.கோவிந்தர் இஸ்லாமிய மதத்தில் சூபி வகுப்பைச் சேர்ந்தவர்.ஸ்ரீ ராமகிருஷ்ணர் முஸ்லீம்களைப் போல் உடை தரித்து நேரம் தவறாமல் நமாஸ் ஓதி வந்தார்.மூன்று தினங்களில் அம்மதத்தின் முடிவான அனுபவங்களைப் பெற்றார்.1873ல் இவர் சம்புமல்லிக் என்ற கிறிஸ்துவ பக்தரின் தொடர்பால் அம்மதத்தில் ஈடுபாடு கொண்டார்.ஏசுநாதரின் தரிசனமும் பெற்றார்.

திங்கள், 21 பிப்ரவரி, 2011

தரிசன நாள்

இன்று அன்னையின் பிறந்த தினம்.
சமர்ப்பணம் பலிப்பது சர்வமும் வெற்றியாவது.
செயலுக்குக் காலம் தேவை.
நல்லவரை அன்னை நாடி வருகிறார்.
உண்மையான சக்தி மௌனத்திலுறைகிறது.
நேரம் பெரிய நேரமானால் ,எவரும் எதையும் செய்யத்
தயங்க மாட்டார்கள்.

செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

தலைமைப் பண்பு


தன்னலம் தவிர்த்தார் ;தலைவர் ஆனார்.

தியாகமும்,சேவையும் தலைவரின் இன்றியமையா இரு குணங்கள்.

இயலாதோரையும் ஏற்றமுறச் செய்வார் இனிய தலைவர்.

வழியாக அமைபவனும்,வழியை அமைப்பவனும் மாபெரும் தலைவன்.

அறிவையும்,உணர்வையும் சமநிலைப்படுத்துபவன் உயரிய தலைவன்.

பாதையை அறிவது மட்டுமன்று ;பாதையாக ஆவதும் உயரிய தலைமை.

ஒன்றாக இருப்பதும்,ஒருங்கிணைப்பதும் உத்தமத் தலைவன் இலக்கணம்.

மாண்பாக நடப்பவர் மதிப்பான தலைவர்.


தருவதில் மகிழ்பவர் தன்னிகரில்லாத் தலைவர்.

இயங்கிக் கொண்டே இருப்பதைவிட,இயக்கிக் கொண்டே
இருப்பது இனிய தலைமை.

உரிமையை உணர்ந்து,உண்மையை உரைப்பவர் உயரிய
தலைவர்.

திசையைத் தெளிவாக்கி,விசையை நெறிப்படுத்துபவர்
விண்ணுலகையும் ஆளும் தலைவர்.
(நன்றி;தூதன்)
தலைமையேற்கும் தன்னிகரில்லாப் பண்பு கொண்டவர்கள் ,தரணியை வெல்லும் தனித்தன்மை கொண்டவர்கள்.இவர்கள் புரிவது கர்ம யோகம்;
இவர்கள் செய்ய வேண்டியதில்லை யாகம்.

திங்கள், 14 பிப்ரவரி, 2011

வாழ்க்கை

வாழ்க்கையில் வேதனைகளைத் தவிர்க்க முடியாது.துன்பங்களும்,துயரங்களும்
வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே இருக்கின்றன.எத்தனையோ கஷ்டங்களை நாம் அனுபவிக்கின்றோம்.எத்தனையோ துயரங்களைச் சந்திக்கிறோம்.
இவ்வளவு கஷ்டங்கள் நமக்கு ஏன் ஏற்பட வேண்டும் எனச் சிந்திக்கிறோம்.
வேதனைகள் அனுபவங்களாக மாற வேண்டும். வேதனையை அனுபவித்தால் மட்டும் பயனில்லை.வேதனை ஏன் ஏற்பட்டது,அதை எந்த வழிகளில் தவிர்த்திருக்கலாம் என்றெல்லாம் யோசிக்கும்போதுதான் அது அனுபவமாகிறது.துன்பங்களிலிருந்து பாடம் கற்றுக் கொள்வதுதான் அனுபவம்.
அந்தப் பாடம் என்பது உண்மையை உணர்தல்.
இது தான் தீர்வு!எல்லாப் பிரச்சனைகளையும் இதி தீர்க்கும்.கேட்பதற்கு ஏதோ தத்துவம் போலத் தோன்றினாலும் இதுதான் உண்மை.

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

பாரதி

ஆன்ம ஒளியில் மூழ்கித் திளைத்து ஆனந்தம் கண்ட கவி.
                                         மண் பயனுற வேண்டும்
                                         வானகம் இங்குத் தென்பட வேண்டும்
                                         உண்மை நின்றிட வேண்டும்
                                        
                                         ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
                                          
                                         இத்தரை மீதினில் இன்பங்கள் யாவும்
                                          எமக்குத் தெரிந்திடல் வேண்டும்.

பாட்டுத் திறத்தாலே வையத்தைப் பாலித்திட எண்ணியதற்குக் காரணம் அவனுள்ளே முகிழ்த்த ஆன்மவொளி!

கடவுள்

கடவுள் எல்லா இடங்களில் இருந்தாலும் அவரை நல்ல மனிதப்பண்புகளின் மூலமே நாம் அறிய முடியும்.

                                 ஜெர்மன் நாட்டு சமுதாயப் பேராசிரியர் மேக்ஸ் வெபர் கூறுகிறார்,''உலகம் திருத்தமுடியாத அளவுக்குக் கேவலம் அடைந்த போதிலும்,அடிமுட்டாள்களாக மக்கள் நடந்து கொண்ட போதிலும் அதைக் கண்டு  ஆயாசப்படாமல் ,எப்படியிருந்தாலும் சரி என்று எவன் நம்பிக்கையுடன் செயல்படுகிறானோ அவன் அந்தராத்மாவில் அழைப்பு இருந்து கொண்டே இருக்கிறது''.பெருந்தலைவர்கள் பலரும் அத்தகைய அந்தராத்மாவின் குரலைக் கேட்டவர்கள் தான்.

சனி, 5 பிப்ரவரி, 2011

ஆன்ம ஆனந்தம்

ஆன்மிக அமைதி மேம்பட்டது.முடிவற்றது.அது வெறும் சிந்தனைத் தெளிவோ,
மனக் கட்டுப்பாடோ,சாத்வீக நிலையோ அல்ல.அதுவே 'பேரமைதி' என்பது.இதனால் ஏற்படும் விளைவுகள் முழுமையாக,நிரந்தரமாக இருக்கும்.தனது ஒவ்வோர் அணுவிலும் அது பரவியிருப்பதை உணரும்போது அதனுடைய விளைவுகள் மகத்தானவையாக இருக்கும்.
                                                                        -ஸ்ரீஅரவிந்தர்

புதன், 19 ஜனவரி, 2011

அன்னையே சரணம்                                                               அன்னையே  சரணம்!ஓம் நமோ பகவதே!ஆனந்த மயி,சைதன்ய மயி!              சத்ய மயி பரமே!


    ‘ பக்தியும்,சேவையும்’  என்ற புத்தகத்தில்  ‘அன்னை விரும்பும் ஆன்மீகப் பக்குவம்தொடங்கிஅன்னை அரவிந்தர் அவர்களுக்குக் கிடைத்த சில ஆன்மீக அனுபவங்கள்வரை 29 தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
                       அதில் சில தலைப்புகள்,

     1.மனித உறவுகளைப் பற்றி.
     2.ஆன்மீக வாழ்க்கையும்,மனித உணர்வுகளும்.
     3.நன்மை,தீமைகளைப் பற்றி ஒரு கண்ணோட்டம்
     4.அன்பர்களின் அன்றாட வாழ்க்கையில் அன்னை.

     முதலாவதாகமனித உறவுகளைப்பற்றி எடுத்துக் கொள்வோம்.
     எல்லா மனிதர்களும் மற்ற மனிதர்களுடன்  உறவாடுவதால்,
     மனிதர்களுக்கிடையே உள்ள உறவுகள் என்பது எல்லோருக்கும் 
     பிடித்தமானதொன்றாகிறது.உளவியல் நிபுணர்கள்,தத்துவ ஞானிகள்
     ,கவிஞர்கள்,எழுத்தாளர்கள் மற்றும் பலவகைச்
     சிந்தனையாளர்கள் எல்லாம் மனிதர்கள் உறவாடுவதைப்
     பற்றி பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்கள்.சராசரி
     மனிதன் கூட தான் மற்றவர்களுடன்
     உறவாடுவதிலிருந்து புதுப்புது உண்மைகள் தெரிந்து கொள்கிறான்.                                           
     மனித உறவுகளை உன்னதமாகவும்,உயர்வாகவும் மாற்ற மக்கள்
     பெருமுயற்சி செய்துள்ளார்கள்.அன்பாகவும், ஒருவருக்கொருவர்
     விட்டுக்கொடுத்தும் பழக வேண்டும் என்று பலர் ஆசைப்படுவதுண்டு
     .பெற்றோர்கள் தம்முடைய பிள்ளைகளைத் தம்முடைய
     பிரதிபிம்பமாக உருவாக்க முயல்வதுண்டு.தொண்டர்கள் தலைவர்களைத்
     தெய்வமாகப் போற்றுவதுண்டு.இருந்தாலும் இத்தகைய இலட்சிய 
     உறவுகள் ஒரு சில நேரங்களில்தாம் உண்மையாகின்றன.பெரும்பாலான 
     மக்கள் தம்முடைய அன்றாட வாழ்க்கையில் தேவையின் 
     பேரிலும்,சுயநலத்தின் பேரிலும் தான் மற்றவருடன் பழகுகிறார்கள்.
     மனிதர்களின் உறவாடலில் தேவையென்பது ஒரு பெரும்பங்கை
     வகிக்கிறது.தேவையில்லாத பொழுது மற்றவர்களுடன் ஓருறவை
     வளர்த்துக் கொள்வது மிகவும் கடினமாகக் கூட 
     அமையலாம்.மற்றவர்களுடன் நன்றாகப் பழகக்கூடிய ஒருவருக்கு
     அமைந்த கத்துவீட்டுக்காரர் தனிமையை நாடுபவராக இருந்தால்,
     அவரோடு உறவாடுவது மிகக் கடினமாகும்.தேவை 
     என்பது அளவோடு இருந்தால்தான் மனித உறவுகள் இன்பகரமாக 
     இருக்கும்.ஆனால் இத்தேவையை அளவோடு வைத்திருப்பது மிகவும்
     கடினம்.அது அளவை மீறும்பொழுது பல பிரச்சனைகள் உண்டாகின்றன.
     தேவையைப் போல பிரச்சனை உண்டாக்கக்கூடிய இன்னொரு
     விஷயம் அதிகாரம் செய்வது.மனிதர்கள் மற்றவர்களை அடக்கி
     ஆள்வதில் ஓர் இன்பம் காண்கிறார்கள்.பெற்றோருக்கும்,பிள்ளைகளுக்கும்
     இடையே  இப்பிரச்சனை பெரும்பாலும் வாராது.கணவன்,மனைவியிடையே 
     உருவாவதற்கு நிறைய சந்தர்ப்பங்களுண்டு.நட்பு வட்டத்திலும்
     இவ்வாறான பிரச்சனைகள் எழும்.சிலர் தோழர்களை அதிகாரம் செய்ய 
     முயல்வார்கள்.அத்தகைய ஒருவரின் அதிகாரத்தைத் தோழர் ஏற்றுக்
     கொண்டால்,உறவு சுமுகமாகத் தொடரும்.இல்லையெனில் சிக்கல் 
     எழும்.சுயநலம்,அன்பைப் பெறுதல் அல்லது காட்ட வேண்டும் என்ற
     தேவை,அதிகாரம் செய்ய விரும்புதல் ஆகிய மூன்று அம்சங்களால்
     மனிதர்களுடைய உறவாடலில் உள்ள மகிழ்ச்சி,சுமுகம் ஆகியவை 
     கெட நேரிடுகிறது. பெற்றோர்கள் தம் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும்
     பிள்ளைகள் மேல் அதிக பாசம் காட்டுகிறார்கள்.பெற்றோர்,பிள்ளை உறவே 
     இவ்வாறிருக்க பிற உறவுகளைப் பற்றிச் சொல்ல வேண்டிய 
     அவசியமில்லை.இம்மாதிரு குறைகள் நிறையப் பேரிடம் இருப்பதால்
    , இவையில்லாதவர்களை மக்கள் விநோதமாகப் பார்க்கிறார்கள்.யாரேனும்
     ஒருவர் நல்ல எண்ணத்தில் உதவ முன் வந்தாலும்,அதை நம்பாமல்
     வேறு ஏதேனும் காரணம் இருக்கும் என்று நினைக்கிறார்கள்.
     மேலும் மனித சுபாவத்தில் எந்நேரமும் வாழ்க்கையில் ஒரு ருசியைத் 
     தேடும் குணம் உள்ளது.நல்லவிதமாகக் கிடைக்கும் இன்பத்தை விடத்
     தவறாகக் கிடைக்கும் ருசியை மனிதமனம் அதிகமாக நாடுகிறது.

ஞாயிறு, 16 ஜனவரி, 2011

அன்னையே சரணம்


                                          அஸ்திவாரம் வாழ்வுக்கு
                                          ஆன்மீகமே!