செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

ஆனந்தம் -அனந்தம்





                          
                                            எங்கெங்கு  காணினும்  சக்தியடா-தம்பி
                                            ஏழுகடலவள்   வண்ணமடா -அங்குத்
                                            தங்கும்   வெளியினிற்  கோடியண்டம்-அந்தத்
                                            தாயின்  கைப் பந்தென  ஓடுமடா

             இறையாற்றல்  இந்த  பூமிப் பந்தை  சுழலச்  செய்கிறது.அதில்  நாம்  ஆனந்தத்தைத்  தேடி  அலைந்து  கொண்டிருக்கிறோம்.கால ஓட்டமானது  ஆனந்தத்தை நமக்கு  அனந்தமாகத் தருகிறது.ஆனந்தம்  அனந்தமாக  இருப்பதை  கண்ணதாசன்  அர்த்தமுள்ள இந்து  மதத்தில் சொல்கிறார்.
                                   சிங்காசனத்தில்  வீற்றிருந்து  செங்கோல்  செலுத்திய  மாமன்னர்களின்  பெயர்கள் கூட  வரலாற்றில்  மறைந்துவிடும்.
  ஆனால்,
                     வாழ்க்கையின்   இன்ப ,துன்பங்களை   நன்றாக   அனுபவித்து 'முழு  உண்மைகளைத்' தெரிந்து  அவற்றை   மக்களிடையே  பொழிந்த  ஞானிகளின்  பெயர்கள்  வரலாற்றில்  என்றும்  மறையாது ,அழியாது.
தத்துவ ஞானிகள்  தான்  இந்த  நாட்டின்  தலைவிதியை  நிர்ணயிக்கின்றனர்.
வெற்றி  பெற்றவனுக்கு  எதுவும் சர்வசாதாரணமாகத்  தெரிகிறது.தோல்வியுற்றவனுக்கோ  எதைக்  கண்டாலும்  பயம்  வருகிறது.
வென்றவனுக்கு  மலையும்  கடுகு ;தோற்றவனுக்கு  கடுகும்  மலை.
                                                        வெற்றி   மயங்க  வைத்துத்  தோல்வியை  இழுத்துக்  கொண்டு  வருகிறது.தோல்வி  அடக்கத்தத்தைத்  தந்து  வெற்றியைக்  கொண்டு  வருகிறது.
                                              வருவது  போவதற்காக ; போவது  வருவதற்காக ;  பிறப்பது   இறப்பதற்காக  ;இறப்பது  பிறப்பதற்காக ;அழிவது  மீள்வதற்காக ; மீள்வது  அழிவதற்காக ;விதைப்பது  அறுப்பதற்காக ;அறுப்பது   விதைப்பதற்காக.
                                             கோடையில்  குளம்  வற்றிவிட்டதே  என்று  கொக்கு  கவலைப் படக் கூடாது,மீண்டும்  மழைக்காலம்  வருகிறது.
                                                மழைக்காலம்   வந்து விட்டதேன்று  ந்தி  குதிக்கக் கூடாது;அதோ  வெயில்காலம்  வந்து  கொண்டிருக்கிறது.
                                                இன்ப ,துன்பத்தை  சமமாகப்  பாவிக்க  வேண்டும்   என்ற  மனோநிலையை  இது  காட்டுகிறது.இம் மனோநிலையே  ஆனந்தத்திற்கு  வழி தானே?
ஆனந்தத்தின்   உற்பத்தி ஸ்தானம்  அனந்தம்.
                                       தனக்கு  உவமை   இல்லாதான்   தாள்   சேர்தலே
அனந்தமான   ஆனந்தத்திற்கு  வழி.