செவ்வாய், 26 ஏப்ரல், 2011

அதிர்ஷ்டம்


                          
              பயந்து அடங்குபவன் பிழைக்கத் தெரிந்தவன்.

             மகிழ்ச்சியால் மலர்பவன் அதிர்ஷ்டம் பெறுவான்.

ஓசையின் தொடர்ச்சி




  • உரிமையைப் பிறருக்கு அளித்துக் காத்திருப்பது இறைவனின் பொறுமை.
  • தேடிப் போவது,நாடி வருவது காலம்,இடத்தைக் கடந்த பண்பு.
  • எதைப் பெற்றால் அனைத்தையும் பெற முடியுமோ அதுவே நிம்மதி.
  • மாற வேண்டிய இடத்தில்,மாற்றம் அதிர்ஷ்டத்தை வெளிப்படுத்தும்.
  • அருள் கொடுத்ததை எடுப்பதில்லை.

ஜீவியத்தின் ஓசை


தானே செயல்படுவது ஆன்மா.நாமே செயல்பட முனைவது அகங்காரம்.


நாம் நினைப்பது தானே நடந்தால் நாம் சரியாக இருப்பதாக அர்த்தம்.


பிரம்மம் மனித வாழ்வில் எட்டிப் பார்ப்பதை,தெய்வச் செயல் என்கிறோம்.


உள்ளே சுயநலமும்,வெளியே நல்ல பழக்கமும் ஆன்மிகப் பலனைத் தராது.


எச்சரிக்கையை மதிப்பவருக்கு வாழ்வில் தவறு நடப்பதில்லை.

தியானம்



ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

ஆன்ம ஒளி


                               வேதங்களை ஓதுகிறார்கள்,சாத்திரங்களை
                               யெல்லாம் கரைத்துக் குடிக்கிறார்கள்
                                இருந்தாலும் அவர்கள் இறைவனை
                               அறிய முடிவதில்லை
                               நாத்திகர்களோ இறைவன் இல்லை,
                                                                                  இருக்கிறான்
                               என்றால் காட்டு என்கிறார்கள்

                              இறைவன் உண்டு என்று நம்புகின்ற
                              ஆத்திகர்களாலேயே அறியமுடியாதபோது
                              இல்லை என்று முடிவு செய்து விட்ட
                               நாத்திகர்களால் எப்படி இறைவனை
                              அறிய முடியும்?
                              இந்த இருவரும் ஒரே தவற்றைச்
                              செய்கிறார்கள்
                              இறைவனை 'அறிய' முயல்கிறார்கள்
                              உண்மை என்னவென்றால் இறைவனை
                              உணரத்தான் முடியும்,அறிய முடியாது
                              அறிவுக்கு எட்டாதது எதுவோ அதுவே
                             இறைமை.
                                                                     -அப்துல் ரகுமான்
இதையே அன்னையின் சைத்தியக் கல்வி சொல்கிறது.

''அறிவை நம்பாதே, ஆன்மாவை நம்பு''.  ஆன்ம அனுபவம் இறைத் தேடலுக்கு வழி.

புதன், 20 ஏப்ரல், 2011

கவியின்பம்


  • உலகினிலே எல்லோரும் பேசுகின்றார்
  • ஒருவரே பத்தில் அதை எழுதுவர்! அப்
  • பலபேரில் கவி எழுதும் திறமை பெற்றோர்
  • பத்தாயிரத்திலொரு பேரே ;அஃதுள்
  • சில பேரே உலகநலப் பொது நோக்கோடு
  • ஜீவனுள்ள கவிதைகள் செய்வார் ;என்றாலும்
  • நில உலகில் இன்றுள்ள அத்தகைய பாக்கள்
  • நீலவான் மீன்கள் ஒக்கும் வயதில்,எண்ணில்!
                                                                        -வேதாத்ரி மகரிஷி

வியாழன், 7 ஏப்ரல், 2011

பெரு வழி


ALL  CAN  BE  DONE  IF  GOD  TOUCH  IS  THERE.


  • நாம் விலங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்றது பெருமைக்குரிய விஷயந்தான்.ஆனால் இன்னும் நம்மால் வெற்றி கொள்ளப்படாத பல விஷயங்கள் இருப்பதைப் பார்க்கும் போது இந்தப் பெருமை சற்றும் பொருளற்றதாகிறது.
  • மகிழ்ச்சியின் தொட்டறியாத எல்லைகள் தானாகவே திகழும் அறிவின் பரப்புகள்,இந்த ஆன்மாவின் அமைதி நிலை,இப்படி வெற்றி கொள்ளப் பட வேண்டியவை அநேகம்.
  • இவற்றில் இறைத் தொடுதலின் கண நேர அனுபவமே மகத்தானது.நாம் இதுவரை பெற்ற யாவும் இதற்கு ஒப்பாக மாட்டா.
  • அந்தப் பேரின்பத்தை அடையும் மார்க்கமோ குறுகியதாயிருக்கிறது.
  •                                                                    -ஸ்ரீஅரவிந்தர்

புதன், 6 ஏப்ரல், 2011

முத்துச் சிதறல்

கணக்கறிந்தார் கல்வி கற்றறிந்தாரே-திருமந்திரம்




நன்றாற்றலுள்ளும் தவறுண்டு -திருக்குறள்




ஒன்று பரம்பொருள் நாமதன் மக்கள்-பாரதி






பண் இனிது ,பாடல் உணர்வார் அகத்து-நான்மணிக்கடிகை