சனி, 25 ஜூன், 2011

ஆன்ம அழைப்பு

                             ஆன்மாவை   அழைப்பது   எப்படி?
                                   
                               பலர்    ஆன்மாவை   அழைப்பதில்   வெற்றியடைகிறார்கள்.அதை   எப்படி  நிதானமாக  வளர்த்துக்  கொள்வது   என்பது  கேள்வியாக  உள்ளது.ஆன்மா  மனதிற்கு  அடுத்த  உயர்ந்த  நிலையில்  உள்ளது.ஒருவர்  ஆன்மாவை  அழைக்கும் போது  அவருடைய  எண்ணங்கள்  குறுக்கிடுகின்றன.அவருடைய  முயற்சியைப் பயனற்றுப்  போகச்  செய்து  விடுகின்றன.மனிதன்  அவன்  எண்ணங்களுடன்   பிரிக்க முடியாத படி  இணைக்கப் பட்டுள்ளான்.இந்த  உண்மையை  உணர்ந்து  மேலும்   நினைக்கக் கூடாது  என்று  முயல்வது,மனிதனை  எண்ணங்களிலிருந்து  பிரிக்கிறது.பிறகு  ஆன்மாவை அழைத்தல்  சாத்தியமாகிறது  என்பது  சத்தியம்.


ஞாயிறு, 19 ஜூன், 2011

"If  winter  comes,can  spring  be  far  behind"என்று  ஒரு  கவிதையில்  கேள்வி  விடுத்து,தனக்குத் தானே  நம்பிக்கை ஊட்டிக் கொள்கிறார் ஷெல்லி.இறைவனைச் சரணடைந்தோர் அடையும் இன்பமும் இவ்வாறே நம்பிக்கையின் பாற்பட்டது.இதிலே  துன்பம் எது,இன்பம்  எது  என்று  நம்  மனதிற்குள்ளாகவே  கேட்டு  நாமே  ஆய்ந்து  துயருக்கான  காரணத்தைக்  காண  முடிவது  சிறப்பு.பரிகாரங்களோ,திரு நாமங்களோ  மனதைப்  பக்குவப் படுத்தாது.
நாம்  கேட்கும்  கேள்வியையும்.நம்  மனம்  தரும்  பதிலையும்  பொறுத்துத்  தீர்வு  கிடைக்கும்.


திங்கள், 13 ஜூன், 2011

பொய்மை

ஆன்மிகத்தை மனம்  ஏற்றுக்  கொண்டால்  ஒருவர்  பொய்யே  சொல்ல  முடியாது.அரசு அலுவலகங்கள் ,கடை  வீதி, வீடு  மற்றும்  எல்லா  இடங்களிஙும்  பொய்மையில்  மூழ்கடிக்கப்பட்ட   வாழ்க்கை  நமக்குத்  தலை  வணங்கும். நம்மை  அதன்  விருப்பத்திற்கு  இணங்கும்படி  கேட்காது.அதற்குப்  பதிலாக  மக்கள்  நம்மிடம்  நேர்மையுடன்  நடந்து   கொள்ள  விருப்பம்  தெரிவிப்பார்கள்.
அப்படிப் பட்டவரின்  வேலை   கணத்தில்   முற்றுப்  பெறும்.

ஆன்ம விளக்கம்


                    
குடும்பத்தில்  தொன்மையான  தூய்மையுடனும், யோகப் பரவசத்துடனும்  வாழ்ந்தால்  அது   மனித வாழ்வை  தெய்வீக  வாழ்வாக  உயர்த்தும்.
                                          நீண்ட  பயணத்தின்  இலட்சியம்  அதுவானால்  வாழ்வில்  தாழ்ந்த  நிலையில்  உள்ளவர்  முதலாவதாக  அடியெடுத்து  வைப்பது  என்பது  ஆன்மாவில்  வாழ்வதாகும்.அப்படிப்பட்ட  வாழ்விற்கு  என்ன  செய்ய  வேண்டும்?
இது வரை     பின்பற்றிய    எல்லா  மத  வழிபாடுகளும்  விலக்கப்பட  வேண்டும்.மத வழிபாடுகள்  செய்த  காலம்  முடிந்து  விட்டது.எதிர் காலம்  ஆன்மீகத்திற்கு  உரியது.

செவ்வாய், 7 ஜூன், 2011

ஆன்மீகம் என்பது என்ன?

                               ஆன்மிகம் தபஸ்விக்கும்,வாழ்வு குடும்பத்தில் உள்ளவர்க்கும் உரியது என்பது மரபு.நம்முடைய மரபு மதரீதியானது.நம்மில் ஒவ்வொருவரும் ஆன்மாவை உணர்வதற்காக தபஸ்வியாகவோ,துறவியாகவோ முடியுமா?
விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளை ஒவ்வொருவரும் அனுபவிக்கும் வகையில் நவீன தொழில்நுட்பம் வழி செய்துள்ளது.அம் மாதிரியே ஆன்மிகத்தின் பலன்களை அனைவரும் பெறும்படி செய்து கொள்ளலாம்.

                                                    சாதாரணமாக எந்த இடத்திலும் பொய்யும்,மெய்யும் கலந்து தான் இருக்கும்.அதில் மெய்யைத் தேர்ந்தெடுத்தல் ஆன்மிகம்.ஒரு வேலையை எப்படி வேண்டுமானாலும் செய்யலாம்.நேர்த்தியோடு செய்யும் வேலையில் தெய்வாம்சம் உள்ளது.