செவ்வாய், 12 மே, 2015

ஸ்ரீ அரவிந்த சுடர்


  •              தீர  யோசனை  செய்து  சேர வேண்டும்.

                      சேர்ந்தால்  பிரியக் கூடாது.


                     நம்மால்  ஆதாயமில்லாவிட்டால் இனி நட்பு  நீடிக்காது
                     என்பது  நட்பல்ல.

           ஆதாயம்  இல்லை என்பதால் விலகக் கூடாது என்ற  நல்லெண்ணம்                     ஆதாயத்தை உற்பத்தி செய்ய வல்லது.

  
                   நட்பு நஷ்டத்தைக் கடந்தது.

வியாழன், 16 ஏப்ரல், 2015

ஜீவியத்தின் ஓசை


                                               


உடலின்  உணர்வாக ஆன்மா  வெளிப்படுவது உடல்நலம்.

நல்லெண்ணம்  சக்தி  வாய்ந்தது.

அது  பிறர் வாழ்வை  அளவு  கடந்து உயர்த்தும்.

நல்லெண்ணம் தரும் பலனில் ஆன்மீகப் பலன் முதன்மையானது.

திங்கள், 23 மார்ச், 2015

ஜீவிய மணி
 கற்பனையில் பலிக்கும் கருத்திற்கு நடைமுறையில் உயிர் பெறும் உரிமை       உண்டு.


பொருள்  வரும் பொழுது  அருள்  உடன்  வரும்.


மனம்  செய்யாததை  பணம்  செய்யாது.


பணம்  செய்யாததையும்  மனம் செய்யும்.

வெள்ளி, 20 மார்ச், 2015

யோகவாழ்க்கை விளக்கம்

ஆன்ம  வளர்ச்சி   
             ஞான யோகத்திற்கு  நிஷ்டை  கருவியாவதுபோல்,ஆன்மாவின்  வளர்ச்சிக்கு ஆர்வம் கருவியாகிறது.