ஞாயிறு, 5 அக்டோபர், 2014

அதிர்ஷ்டம்                                    அன்னையின் மலரடி பணிந்து தவத்திரு கர்மயோகி அவர்கள் தந்துள்ள அதிர்ஷ்டம் என்னும் நூல் அதிர்ஷ்டத்தின் திறவுகோல்.

                                                    அகவாழ்வின் பலன் வேறு.புறவாழ்வில் பொருளால் கிடைத்த  பலன் அகவாழ்வில் அன்னையின் அருள் என உணர்வதால் அகமும்,புறமும் அருளாலும்,அன்பாலும் நிறையும் அற்புதம் ஏற்படுகிறது

                                            பலனின் அளவு பெருகுவது,தாழ்ந்த நிலையிலும் திறமையை ஏற்ற்ப் பாராட்டுவது அடுத்த கட்டத்திலும் அன்பு பெருகி ஆதரவளிப்பது கடைசிக் கட்டத்திலும் கிடைப்பது புற வாழ்வு அளிக்கும் அன்னை நிறைவுகளாகும்.

                                               ஒரே வேலையாக இருப்பினும் அதைச் சிறிய இடத்தில் செய்வதற்கும்,பெரிய இடத்தில் செய்வதற்கும் நடைமுறை சௌகரியங்கள் இடத்திற்கேற்ப அமையும்.கடையில் 30 வருஷம் வேலை செய்தால் மாதச்சம்பளம் கிடைக்கும்.ஓய்வு பெறும்போது ஒரு சன்மானம் கிடைக்கும்.அரசாங்க வேலை என்றால் ஓய்வு பெற்ற பின்னும் கடைசிவரை பென்ஷன் உண்டு.இடத்திற்கேற்ற பலன்.அதே போல் வாழ்வுக்கும்,அன்னை வாழ்வுக்கும் மாற்றமுண்டு.வாழ்க்கையில் வெற்றி வேண்டுமானால் நியாயம் இருந்தால் போதாது.வலிமை வேண்டும்.அன்னை வாழ்வில் நியாயம் இருந்தால் வலிமைக்கு உரிய வெற்றியையும் அன்னை வழங்குவார்.


                                       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக