திங்கள், 14 பிப்ரவரி, 2011

வாழ்க்கை

வாழ்க்கையில் வேதனைகளைத் தவிர்க்க முடியாது.துன்பங்களும்,துயரங்களும்
வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே இருக்கின்றன.எத்தனையோ கஷ்டங்களை நாம் அனுபவிக்கின்றோம்.எத்தனையோ துயரங்களைச் சந்திக்கிறோம்.
இவ்வளவு கஷ்டங்கள் நமக்கு ஏன் ஏற்பட வேண்டும் எனச் சிந்திக்கிறோம்.
வேதனைகள் அனுபவங்களாக மாற வேண்டும். வேதனையை அனுபவித்தால் மட்டும் பயனில்லை.வேதனை ஏன் ஏற்பட்டது,அதை எந்த வழிகளில் தவிர்த்திருக்கலாம் என்றெல்லாம் யோசிக்கும்போதுதான் அது அனுபவமாகிறது.துன்பங்களிலிருந்து பாடம் கற்றுக் கொள்வதுதான் அனுபவம்.
அந்தப் பாடம் என்பது உண்மையை உணர்தல்.
இது தான் தீர்வு!எல்லாப் பிரச்சனைகளையும் இதி தீர்க்கும்.கேட்பதற்கு ஏதோ தத்துவம் போலத் தோன்றினாலும் இதுதான் உண்மை.

2 கருத்துகள்:

  1. உண்மையை எல்லோர் மனதிலும் நிரைத்து வைத்திருக்கிறான் இறைவன் ஆனால் நாம்தான் அதை எங்கெல்லாமோ தேடிக் கொண்டிருக்கிறோம்

    பதிலளிநீக்கு
  2. நீங்கள் சொல்வதிலும் உண்மை இருக்கிறது.

    பதிலளிநீக்கு