செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

தலைமைப் பண்பு


தன்னலம் தவிர்த்தார் ;தலைவர் ஆனார்.

தியாகமும்,சேவையும் தலைவரின் இன்றியமையா இரு குணங்கள்.

இயலாதோரையும் ஏற்றமுறச் செய்வார் இனிய தலைவர்.

வழியாக அமைபவனும்,வழியை அமைப்பவனும் மாபெரும் தலைவன்.

அறிவையும்,உணர்வையும் சமநிலைப்படுத்துபவன் உயரிய தலைவன்.

பாதையை அறிவது மட்டுமன்று ;பாதையாக ஆவதும் உயரிய தலைமை.

ஒன்றாக இருப்பதும்,ஒருங்கிணைப்பதும் உத்தமத் தலைவன் இலக்கணம்.

மாண்பாக நடப்பவர் மதிப்பான தலைவர்.


தருவதில் மகிழ்பவர் தன்னிகரில்லாத் தலைவர்.

இயங்கிக் கொண்டே இருப்பதைவிட,இயக்கிக் கொண்டே
இருப்பது இனிய தலைமை.

உரிமையை உணர்ந்து,உண்மையை உரைப்பவர் உயரிய
தலைவர்.

திசையைத் தெளிவாக்கி,விசையை நெறிப்படுத்துபவர்
விண்ணுலகையும் ஆளும் தலைவர்.
(நன்றி;தூதன்)
தலைமையேற்கும் தன்னிகரில்லாப் பண்பு கொண்டவர்கள் ,தரணியை வெல்லும் தனித்தன்மை கொண்டவர்கள்.இவர்கள் புரிவது கர்ம யோகம்;
இவர்கள் செய்ய வேண்டியதில்லை யாகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக